கிழக்கில் தனித்துவ முஸ்லிம் அணி களமிறங்கத் தயார்!
Thursday, June 28th, 2018
கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தனித்துக் களமிறங்க புத்திஜீவிகள் கூட்டமைப்பு ஒன்று தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கிழக்கின் தனித்துவக் கட்சியான முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு கட்சிகளிலும் அதிருப்தியைக் கொண்டுள்ள நடுநிலையான புத்திஜீவிகளைக் கொண்ட அரசியல் அணியொன்று தற்போது கிழக்கில் தயார்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது இந்த அணியினர் மாற்று அணியாக களமிறங்கும் வகையில் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதன் பின்னணியில் கொழும்பில் பணியாற்றும் கிழக்கைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள முக்கியஸ்தர்களை ஒன்றிணைத்து வேட்பு மனுத்தாக்கல் செய்வது இவர்களின் திட்டமாக உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களின் வரலாறுகளையும் பாரம்பரியங்களையும் அறிந்த புத்திஜீவிகள் மற்றும் தொழில் நிபுணர்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது பாரம்பரிய முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் வாக்கு வங்கியில் கணிசமான சரிவு ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
தேர்தலில் வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சி அரசியலையே தாங்கள் முன்னெடுக்கப் போவதாக இந்த அணியினர் தெரிவித்து வரும் கருத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Related posts: