கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
Tuesday, December 1st, 2020கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உயர் தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது
உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை - ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக...
அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு!
|
|