கிளினிக் நோயாளர்களுக்கு நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்து விநியோகம்!

Friday, June 4th, 2021

அரச மருத்துவமனைகளில் கிளினிக் பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவந்துட தெரிவித்தார்.

மேலும், இதுவரை கிளினிக்குக்காக முகவரிகளை வழங்காத நோயாளிகள் தமது கிளினிக் ஆய்வு நிலையங்களை தொடர்புகொண்டு உரிய முகவரிகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் மருந்துகளை வீட்டுக்கு வரவழைத்துக் கொள்வது தொடர்பான மேலதிக விடயங்களை அறிந்துகொள்ள இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, 072 07 20 720 அல்லது 072 06 06 060 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விபரங்களை அறிற்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: