கிளிநொச்சி வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி!

Monday, October 1st, 2018

கிளிநொச்சி வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த சவாரி போட்டி கிளிநொச்சி மாட்டுவண்டி சவாரி சங்கத்தினரின் அனுசரணையோடு, வட்டக்கச்சி சவாரி குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இடம்பெற்ற சவாரி போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 70 ஜோடிகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன.

தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் மருக விடாது அவற்றை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இவ்வாறு பல பகுதிகளிலும் சவாரி போட்டிகள் இடம்பெ்று வருகின்றன.

போட்டியில் பங்குபற்றிய 70 ஜோடிகளும் ஐந்து பிரிவுகளாக போட்டியில் பங்கு கொண்டமை குறிப்பிடதக்கது. குறித்த போட்டி இன்று பகல் 2.30 மணியளவில் வட்டக்கச்சி சவாரி திடலில் ஆரம்பிக்கப்பட்டு, 6.30 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

Related posts: