கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவை ஆரம்பம்!

‘அனைவருக்கும் தடுப்பூசி’ எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்தும் நடமாடும் சேவை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று காலை, 57 வது படைப்பிரிவு தலைமையகம் முன்பாக ஆரம்பமானது.
இராணுவத்தினரும், சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து மேற்கொள்ளும் இந்த வேலைத்திட்டம் ஒரு வாரத்திற்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம், இந்த பிரதேசங்களில் உள்ள எமது தாய் தந்தையர்களுக்கு அவர்களின் வீடுகளிற்கு சென்று தடுப்பூசியை வழங்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் பணிப்பிற்கமைவாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக இன்று இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|