கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!

Friday, December 15th, 2017

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று செலுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்ககே  கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பளார் வை தவநாதன் தலைமையிலான வேட்பாளர் குழுவினர் இன்று கட்டுபணத்தை செலுத்தியுள்ளனர்.

கட்டுபணத்தை செலுத்திய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெருவித்த மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் இந்த உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் கடந்த காலங்களில் தமது கட்சி ஜனநாயக ரீதியான செயற்பாடுகளில் அபிவிருத்தியை நிலை நாட்டுவதில் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

IMG_6337

Related posts: