கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளது – அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021

கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் எழுந்தமானமாக இடம்பெறுகின்ற பிசிஆர் பரிசோதனை மூலம் கிடைக்கப்பெறுகின்ற பதிவின் படி கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கூடிய எவருக்கும் தோற்று ஏற்படவில்லை – வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது.

அதன் அடிப்படையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படவேண்டும். பெருமளவு மக்கள் ஒன்றுகூடும், இடங்களில் செல்வதை தவிர்க்கவேண்டும்.

அதேபோன்று அனைவரும் முககவசம் அணிந்து, சுகாதார நடை முறைகளை பின்பற்றவேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த்கது.,

000

Related posts:


இலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பள...
புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!
அதிகரிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை கட்டணம் - தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவிப்பு!