கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, July 8th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அ தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அரசாங்க அதிபர்  கூறுகையில் –

மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பான விடயங்கள் துறைசார்ந்த அதிகாரிகள் அழைக்கப்பட்டு விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழான திருவையாறு பகுதியில் ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் அரைவாசிக்கும் மேலான நிலப்பகுதிகள் பயிற்செய்கைக்கு உட்படுத்தபடாத காணிகளாக காணப்படுகின்றன.

அவை உரிமையாளர்கள் கையேற்காத காரணத்தினால் பயிற்செய்கை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்து அதன் மூலமாக மாவட்டத்தின் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எண்ணியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பயிற்செய்கைக்கு விருப்பம் தெரிவிக்கின்ற விவசாயிகளுடன் வருகின்ற வாரம் கலந்துரையாடலினை நடத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அரச காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு அக்காணிகளை சமூகமட்ட அமைப்புக்களை கொண்டு கூட்டாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை பிரமந்தனாறு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள காணிகளை மீளவும் பயிற் செய்கைக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான நடவடிக்கைகளை வருகின்ற வாரத்திலிருந்து மேற்கொண்டு பயிற்செய்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.

UNDP மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள் எனவே விவசாய நடவடிக்கைக்கு முன்வந்துள்ள விவசாயிகளுக்கான முன்னேற்பாட்டு செயற்பாடுகளுக்கான உதவிகளை வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: