கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Tuesday, November 7th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று காலை- 08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை கிளிநொச்சியின் கெளதாரிமுனைப் பிரதேசத்திலும்,  காலை-08 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி மன்னார் மாவட்டத்தின் தாராபுரம் பிரதேசம், தாராபுரம் வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம், குருக்களுர், பறயனாலங்குளம், நீலியா மோட்டை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: