கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீயினால் பலகோடி சொத்துகள்  இழப்பு!

Saturday, September 17th, 2016

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று(16)இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது

இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும் 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளது.

IMG_6139

தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

IMG_6149

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும் அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்.

IMG_6181

எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

IMG_6074

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு வழங்க்கபட்ட நிலையில் ஏனைய வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது. இந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது.

  IMG_6117

IMG_6116

IMG_6165

Related posts: