கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கோர விபத்து – தந்தை இரு மகன்கள் பலி!

கிளிநொச்சி – பளை – இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஏ-9 வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் மோதியதில் நேற்றிரவு 9.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த காரிரை செலுத்திய 38 வயது நபரும், அவரின் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை அடுத்து, பாரவூர்தியின் சாரதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்களிப்பதற்கு விடுமுறை அளிப்பது அவசியம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் விரைவில் - நீதி அமைச்சர் அலி சப்ரி!
நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் - அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|