கிளிநொச்சி – இரணைதீவு பகுதி காணிகளை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்துள்ளது -கிளி. மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம்

கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு கடற்படையினரால் குறித்த பிரதேசம் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து இரணைத்தீவு 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படவுள்ளது. இந்த பிரதேசத்தின் ஆறு ஏக்கர் காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய...
பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் - மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந...
|
|