கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதான வீதி புனரமைக்கப்படவேண்டியது அவசியமானது.

Monday, May 1st, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான் பிரதானவீதி உட்பட குடியிருப்புகளுக்கான வீதிகள் இன்று வரையில் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் மக்கள் நாளாந்தம் போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர்.

யுத்தப் பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளக வீதிகள் பலவும் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் இற்றைவரையில் புனரமைப்பு செய்யப் படாமலேயே உள்ளன.

அதிலும் குறிப்பாக ஆனைவிழுந்தான் பகுதிக்கான பிரதான வீதியும், ஏனைய குடியிருப்புகளுக்கான வீதிகளும் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் நாளாந்தம் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும், தமது தேவைகளின் நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் மக்களும் பாரியநெருக்கடிளைச் சந்தித்துவருகின்றனர்.

குறித்த வீதிகள் புனரமைக்கப்படாத காரணத்தினால் அங்கு வாழ்ந்துவரும் 400 வரையான குடும்பங்களைச் சேர்ந்தமக்கள் இடர்பாடுகளைச் சந்தித்து வருவதாகவும், வீதிகளைப் புனரமைத்து தருமாறுதுறை சார்ந்தவர்களிடம் பலமுறை கோரிக்கைவிடுத்த போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே ஆனைவிழுந்தான் பகுதிக்கானபிரதான வீதியான அக்கராயன் – வன்னேரிக்குளம் வீதிமக்கள் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதநிலையில் மிகமோசமாகக் காணப்படுவதாகவும், இப்பாதையூடாக சிறிய வாகனங்களில் கூட பயணிக்கமுடியாத அளவிற்கு இவ்வீதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபையும் அக்கறையற்று இருக்கின்றமை தமக்கு வேதனையளிப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: