கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு!

Monday, February 21st, 2022

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி  மாவட்டத்தின் பூனகரி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

குறித்த கிராமத்தில் வாழும் பெருமளவான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்வதுடன் பெருமளவான விவசாய பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் நாளாந்தம் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு தென்னந் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 35 க்கும் மேற்பட்ட தென்னைகளை நாசம் செய்துள்ளது இதேபோன்று நாளாந்தம் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்ட சில காலங்களுக்குள் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இந்த காட்டு யானைகளால் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் என்பது அதிகரித்து காணப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள்  இவ்வாறு காட்டு யானைகளால் ஏற்படுகின்ற அழிவுகளுக்கு எந்தவிதமான நட்டஈடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: