கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம் – பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலைமுதல் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம், புன்னை நீராவி அ.த.க. பாடசாலை, பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அ.த.க. பாடசாலை, முருகானந்தா அ.த.க. பாடசாலை, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லுமாறு அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தடுப்பூசி செலுத்த செல்வோர் தடுப்பூசி அட்டைகளை எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: