கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் – வட மாகாண ஆளுநர்.

Thursday, April 7th, 2016

உலக கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் ஆனால் கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் காணபபடுகின்றார் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படும் போது சித்திரம், சங்கீதம்.நடனம், என்பவற்றில் தேவைகளுக்கு மீறி சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். ஆனால் தொடர்;சியாக கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி . எனவே திட்டமிடப்படாத  ஆசிரியர்  ஆட்சேர்ப்பு காரணமாகவே இவை ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவித்ர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மாணவர்களின் மொத்த தொகைக்கும் ஆசிரியர்களுக்குமான விகிதாசாரப்படி ஒரு ஆசியருக்கு 19 மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆனால் உலகத்தின் கல்விக் கோட்;பாட்டின் படி ஒரு ஆசியருக்கு 35 மாணவர்கள் இருக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.

ஆனால் கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தின் தற்போதைய தகவல்களின் படி   கிளிநொச்சியில் ஒரு ஆசிரியருக்கு 16 மாணவர்கள் காணப்படுகின்றனர்.  ஆனால் தொடர்ச்சியாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு பற்றாக்குறை நிலவியே வருகிறது.

Related posts: