கிளிநொச்சியில் வாள் வெட்டு – கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்!

Thursday, May 30th, 2019

கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்படுகிறது.

பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள்வெட்டில் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது. மூன்று வீடுகள் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் - வேலணை பிரதேச தவிசாள...
உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக சீனி விநியோகிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சு தெரிவிப்ப...
சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து துன்புறுத்தப்படாமல் சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடிய...