கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னேரிக்குளமும் கனகாம்பிகைக்குளமும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்புத் தரப்பினர் ஊடாக பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: