கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்குமாறு கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை!

Tuesday, April 2nd, 2019

கிளிநொச்சி கோணாவில் மற்றும் யூனியன் குளம் ஆகிய பகுதிகளில் குடும்ப வறுமையினாலும் குடும்பப்பிரச்சினைகள் காரணமாகவும் அதிகளவான சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளதாக தெரிய வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாகக்காணப்படும்  கோணாவில் யூனியன் குளம் தஞ்சை நகர் ஆகிய பகுதிகளில் அதிகளவான குடும்பங்கள் வறுமை நிலையில் காணப்படுவதாலும் குடும்பங்களில்  கணவன் – மனைவிக்கிடையேயான வன்முறைகளால் குடும்பப்பிரிவுகள் காரணமாக சிறுவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

இதனால் அதிகளவான சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாத நிலையிலும் பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவுகளில் காணப்படுகின்றனர்.

தஞ்சைநகர்ப்புகுதியில் 48 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருவதுடன் இங்கு அதிகளவான குடும்பங்கள் குடும்ப வறுமையிலும் குடும்பப்பிணக்குகளிலும் பெண் தலைமைத்துவ குடும்பமாக காணப்படுகின்றன.

இத்தகைய குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் பாடசாலைகளுககு செல்லாது நெல் உலரவிடுதல், நெல் அறுவடை, தேங்காய் பிடுங்குதல், மணல் அகழ்வுகள் போன்ற தொழில்களுக்கு செல்வதாகவும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலை மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர், ஆசிரியர்கள், வீடு வீடாகச்சென்று பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வருகின்றனர்.

இருந்தும் குடும்ப வறுமை, குடும்ப வன்முறை, குடும்பப்பிரிவு என்பவற்றால் கல்வியை இடை நிறுத்தும் நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம அலுவலர், கிராம அபிவிருத்தி உத்தியேதாகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் என மூன்றுக்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இதற்கு மேலான அதிகாரிகள் எனப்பலர் உள்ள போதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அக்கறைகாட்டாமை தொடர்பில் கிராம மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts: