கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க விசேட நடவடிக்கை – கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!
Monday, March 15th, 2021கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 13.03.2021 தொடக்கம் 14.03.2021 வரையானக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம், உருத்திரபுரம், திருவையாறு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுக்கும் நோக்கில், கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் மூலமே குறித்த 17 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 உழவு இயந்திரங்களும் 9 டிப்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|