கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வால் குளம் பாதிப்பு!

Wednesday, June 19th, 2019

வன்னேரிக்குளத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

வன்னேரிக்குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் தொடர்ந்தும் சட்டவிரோதமான மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதால் குளம் பாதிப்படைகின்றது. இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

அதேவேளை பொலிஸாருக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம். கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: