கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் புதுமுறிப்புக்குளத்திலிருந்து குறித்த இளைஞரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது - பொது மக்கள் பாதுகாப்ப...
அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் ...
21 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் ரமேஷ் பத்தி...
|
|