கிளிநொச்சியில் கோரம் – தாயும், மகனும் சடலங்களாக மீட்பு!

Tuesday, July 30th, 2019

கிளிநொச்சியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர்களே வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் விஷ்னுகாந்தி வள்ளியம்மை 70 வயதானவர் எனவும், அவரது மகன் விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் 34 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: