கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Monday, July 10th, 2023கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை வைத்தியசாலை பணிப்பாளர் தன்னிடம் வழங்க உள்ளதாக அதன் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய விசாரணைகளின் படி, குறித்த குழந்தைகளின் உடல்நிலை பலவீனமே அந்த மரணங்களுக்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதுபான விற்பனை தொடர்பில் வெளியான வர்த்தமானியை மீளப் பெற அனுமதி!
நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
விளையாட்டு அமைச்சை மீண்டும் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமலிடம் துறைசார் தரப்பினர் வலியு...
|
|