கிளிநொச்சியில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

Tuesday, May 25th, 2021

கிளிநொச்சி நகரில் இன்றையதினம் (25) திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில் அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை பொலிஸார் உடனடியாக மூடியுள்ளனர்.

இன்று காலை முதல் கிளிநொச்சியின் நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. பொது மக்களும் வழமை போன்று நகருக்கு வந்திருந்தனர்.

ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை என அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: