கிறீன் லேயர் அமைப்பு முயற்சி – வேலணையில் 15000 பனைமர நாற்றுக்கள் நாட்டப்பட்டன!

யாழ் மாவட்டத்தின் அடையாளமான பனைவளத்தை பாதுகாக்கவும் இயற்கையான சுற்றுச் சூழலை வழப்படுத்தும் நோக்குடனும் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு மர நடுகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு நடவடிக்கையாக வேலணைப் பிரதேச சபையின் ஆழுகைக்குள் உள்ள அல்லைப்பிட்டி பிரதான வீதி மற்றும் மண்டைதீவு பிரதான வீதி ஆகியவற்றின் இரு மருங்கிலும் மரங்களும் 15 ஆயிரம் பனை மர விதைகளும் நாட்டப்பட்டடன.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணைப்பாளர் பாக்கியநாதன் சசிக்குமார் கூறுகையில் –
பசுமையான சுற்றுச்சூழலை கொண்ட இயற்கைச் சூழலில் எமது மக்கள் வாழவேண்டும் எனதுடன் எமது மக்கள் வாழும் பிரதேசமும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அத்துடன் குறித்த மர நடுகை திட்டத்தினூடாக 15 ஆயிரம் பனைமர நாற்றுக்களும் சூழலுடன் ஒத்து வழரக்கூடியதுமான மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
இவ்வறு நாட்டபட்டுள்ள மரங்கள் கடந்த காலங்களில் ஏனைய இரதேசங்களில் வெற்றியளித்துள்ளமையால் தற்போது வேலணைப் பிரதேசத்திலும் பிரதேச சபை மற்றும்.பொலிசாரின் பங்களிப்புடன் முன்னெடுப்பதால் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக தெரிவுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|