கிரிக்கெட் தோல்வி – நாடாளுமன்றத்தில் விவாதம் ?

Friday, September 1st, 2017

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோர கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர் எனவும் அடுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொரளையில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்து விட்டனர் என்பதற்காக கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நிர்வாக தவறு காரணமாகவே அவர்கள் தோல்வியடைந்தனர் எனவும் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திலங்க சுமதிபால உட்பட கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: