கிரிக்கெட் சபையின் தலைமையை அர்ஜுண ரணதுங்க ஏற்க தயாராம்!

இலங்கை கிரிக்கெட்டை சபையை கலைத்து இடைகால கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையொன்றை நியமிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுண ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்..
அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்துவதற்கு இதுவே சிறந்த தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காக நியமிக்கப்படுகின்ற இடைகால கட்டுப்பாட்டு சபையின் தலைமைத்துவத்தை தான் ஏற்க தயார் என அவர் தெரிவித்ததுடன் இலங்கை கிரிக்கெட் இவ்வாறே செல்லுமாக இருந்தால், எமது கிரிக்கெட் விளையாட்டு நாட்டில் இல்லாது போவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;.
அதனால் இடைகால கட்டுப்பாட்டு சபையொன்றை ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் எனவும், அதனூடாக சிறந்த கிரிக்கெட் அணியொன்றை தன்னால் உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் தேர்தல் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு வாக்குமூலம் அளிக்க சென்ற வேளையிலேயே அர்ஜுண ரணதுங்க இதனைக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|