கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது – அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு!

Wednesday, November 8th, 2023

கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சற்றுமுன் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அத்துடன் விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்ட அவர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக கடுந்தொனியில் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென்றும் மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அதனை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளதென்றும் அமைச்சர் கூறினார்.

சூதாட்ட ஷம்மியா, அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: