கிரிக்கெட்டை சீரமைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Tuesday, November 28th, 2023

கிரிக்கெட்டை சீரமைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கு தாம் அழைப்புவிடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை எதிர்வரும் சில தினங்களில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பொறுப்புகளில் இருந்து நேற்று ஜனாதிபதி நீக்கியதையடுத்து விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சு பதவிகள் வெற்றிடமாகின.

இந்தநிலையில், புதிய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன்,வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நீர்ப்பாசன அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொவிட் நோயாளர்களை குணப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் கையளிப...
அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையி...
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!