கிரிக்கட் சபையின் அதிகாரமிக்கவராக கமல் பத்மசிறி நியமனம்!

தேர்தல் இடம்பெறும்வரை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரமிக்க அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா வழங்கிவைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தேர்தல் இன்று இடம்பெறவிருந்த நிலையில், அதனை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(31) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
இலங்கை கிரிக்கெட்டின், தலைவர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான நிஷாந்த ரணதுங்க தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இலங்கை கிரிக்கட் தேர்தலை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மைதானத்தில் கண்கலங்கி நின்ற குப்தில், ரோஸ் டெய்லர்!
அராசங்கத்தின் அடுத்த திட்டம் : மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் !
ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 91 ஆவது இடம்!
|
|