கிராம மட்ட புதிய தொழிலதிபர்களை உருவாக்க புதிய தொழில்நுட்பம் தாயார் – வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அறிவிப்பு!
Thursday, December 31st, 2020கிராமப்புற இளைஞர் யுவதிகளுக்கிடையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்க தேவையான தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவை வழங்க விதாதா அதிகாரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு அதிகாரிகள் முன்னிலை வகித்து செயற்பட வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கிராம மட்டத்தில் புதிய தொழிலதிபர்களை உருவாக்கும்போது புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவினை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறும் .பசில் ராஜபக்ஷ விதாதா அதிகாரிகள் மற்றும் திறன் மேம்மபாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறித்தியுள்ளார்.
மேலும், தற்போது இளைஞர்களுக்கிடையில் வேலையில்லா பிரச்சினை அதிகளவில் காணப்படுவதுடன் இவர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு திறன் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சு மற்றும் பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றினால் செயற்படுத்தப்படும் 2021 வரவு செலவுத் திட்டத்தை கிராம மட்டத்தில் செயற்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் இதன்போது அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்;
திறன் அபிவிருத்தி தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பிலும், பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு குறித்தும் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது அதிகாரிகள் அற்ற பிரதேச செயலக அலுவலகங்களுக்கு பட்டதாரி பயிற்சியாளர்களின் ஆட்சேர்ப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது..
அத்துடன் அனைவருக்கும் தொழிற்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி, தொழிற்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை மேம்படுத்தல், தொழிற்கல்வி நடவடிக்கைகளை பிரதேச ரீதியாக விரிவுபடுத்தல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு தொழில்நுட்ப மற்றும் உயர் தொழிற்கல்வி வழங்குவது தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கொரு தொழிலதிபர் என்ற ரீதியில் 14022 புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதற்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், விதாதா அதிகாரிகள் புதிய தொழில்முனைவோர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியுள்ளது. இதன் கீழ் பாரம்பரிய கிராமங்கள் ஒன்றிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றும் செயற்படுத்தப்படும். அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவிகளை பெற்றுக் கொடுத்து கிராம மக்களை பலப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்திருந்தமை குறிப்டபிடத்தக்கது
Related posts:
|
|