கிராம சேவகர்களும் நாடளாவிய ரீதியில் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானம்!

Tuesday, April 11th, 2017

தமது இடமாற்றம் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கிராம சேவகர்கள் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.எனினும், குறித்த தீர்மானத்தை முழுமையாக கைவிட வேண்டும் என இலங்கை ஒன்றிணைந்த கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சீ.பி. வன்னிநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: