கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Friday, October 27th, 2017

உள்நாட்டலுவர்கள் அமைச்சினால் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30, 31 ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் சம்பந்தப்பட்ட பரீட்சார்திகளுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சு.தெய்வேந்திரம் அறிவித்துள்ளார்.

Related posts: