கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் அவசியமற்றது – பெப்ரவரி 10 முதல் நடைமுறை!

Thursday, February 6th, 2020

கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் பெறும் நடைமுறை இரத்துச் செய்யப்படுவதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கிராம சேவையாளரால் வழங்கப்படும் வதிவிடச் சான்றிதழ், நற்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள், கடிதங்களுக்கு அந்தப் பிரிவுக்குரிய பிரதேச செயலரிடம் ஒப்பம் பெறும் நடைமுறை தற்போது உள்ளது.

இந்த நடைமுறை பொதுமக்களின் நன்கருதி இரத்துச் செய்யப்படுவதாக பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: