கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, November 7th, 2021

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீரகெடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை

உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த வருடத்தில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் பொது நலச் செயற்பாடுகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதேநேரம், கொரோனா அபாய நிலை குறைவதால், இலங்கையில் பல முதலீட்டு திட்டங்களைத் தொடங்க ஐக்கிய இராச்சியம் (யுகே) ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: