கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024

கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கை மட்டும் மேம்படும் என ஜனாதிபதி நம்பிக்கை கொண்டுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த சில மாதங்களில், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்கீழ் புதிய விவசாயத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, அவர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய விவசாய தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்டு உரிய விவசாய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: