கிண்ணியா கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா என்ற 06 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலத்தினை உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய, குறித்த படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இடம் மாற்றம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து: ஐ.நாவில் இலங்கை அறிவிப்பு!
மனித உரிமை மீறல்களில் மூன்று மாகாணங்கள் முன்னிலையில்!
|
|