கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் சம்பவம்!

Friday, December 13th, 2019

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மந்திகை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜசன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சில மணி நேரத்தின் பின்பே அவரை கிணற்றிலிருந்து மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: