கிணற்றடியில் சறுக்கி வீழ்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!
Tuesday, December 5th, 2017
கிணற்றடியில் சறுக்கி வீழ்ந்து தலையில் பலமாக அடிபட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் ஒரு வாரத்தின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
புத்தூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் விஜயா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் என அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிணற்றடிக்குச் சென்ற போது பாசியில் சறுக்குண்டு மண்டை அடிபட இவர் கீழே வீழ்ந்துள்ளார். தலையில் பலமாக அடிபட்ட இவரை உடனடியாக உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக இவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் மரணமானார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related posts:
|
|