கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுங்கள் – நியமனம் பெற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை!

Thursday, September 3rd, 2020

தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுமாறு புதிதாக அரச சேவையில் இணைந்த பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு தொடர்ந்து உதவுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச சேவைக்கு சம்பளம் தேடி கொடுக்கும் விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகளில் ஈடுபடும் மக்களுக்கு சுமையாகி விடாமல் நியாயமான முறையில் கடமைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொழிலின் மேலதிக செயற்பாட்டுக்காக கணினி பயிற்சி மற்றும் உரிய துறைகளுக்கு வேறு தொழில் சந்தர்ப்பங்களை அபிவிருத்தி செய்வது புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் கடமையாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டதாரிகளுக்கு பதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அரச சேவையில் இணைந்த பட்டதாரிகளின் முழுமையான எண்ணிக்கை 50 ஆயிரத்து 177 என்பதுடன் இதில் 38 ஆயிரத்து 760 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு - கல்வி அமைச்சு...
கொரோனா முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது புங்குடுதீவு - எனினும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும...
மாமடுவ மலையில் உள்ள வனப் பகுதி மறுபடியும் தீப்பிடித்து எரிந்துள்ளது - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ...