கா.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Thursday, June 21st, 2018

நடைபெறவுள்ள சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள், தேசிய அடையாள அட்டையை விரைவில் பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

40 சதவீதமான விண்ணப்பங்கள் இன்னும் அனுப்பப்படவில்லை எனவும் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு ஏற்ப சில விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்து முன்வைக்கப்படாமையால் அவற்றுள் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: