கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக நிலைய முன்பள்ளி பரிசில் தினத்தில் தோழர் ஜீவன்!

Monday, December 3rd, 2018

கால மாற்றத்துக்கு  ஏற்ப எமது இளம் தலைமுறையினரின் ஆற்றல்களும் நவீனத்துடன் கூடியதான மாறுதலைக் கொண்டு கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகைய ஒரு நவீனத்துவத்தினூடாக எமது இளம் சந்ததியினரை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அயராது உழைத்துவருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை சிந்துபுரம் காந்திஜி சனசமூக நிலைய முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

இன்று எமது மாணவர்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனாலும் ஏன் இவ்வாறு வீழ்ச்சியடைந்தது என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காண கடந்த காலத்தில் வடக்கை ஆழுகை செய்தவர்கள் முற்படவில்லை.

ஆனால் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த முறை ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது சிறார்களின் கல்வியறிவும் அவர்களது இதர செயற்பாடுகளும் விருத்தியடைய வேண்டும் என்பது மட்டுமல்லாது அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களது பிரச்சினைகளுக்கும் முடியுமான அளவு தீர்வு கண்டு கொடுத்துள்ளார்.

அந்தவகையில் தொடர்ந்தும் எமது செயற்பாடுகள் மக்களுக்கு அதிகளவில் கிடைக்க வேண்டுமானால் எமக்கு அதிகளவான அரசியல் பலம் கிடைக்கவேண்டும். அத்தகைய ஒரு அரசியல் பலத்தை எம்மிடம் மக்கள் வழங்கும் பட்சத்தில் நிச்சயம் நாம் கல்வியை மட்டுமல்லாது தமிழ் மக்களது அபிலாசைகள் அனைத்தையும் வென்றெடுத்து காட்டுவோம் என்றார்.

Related posts:

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் தாமதம் – 4 ஆம் திகதி அறிவிப்பு வெளிவரும் என கல்வி அமைச...
கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தவறிய அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை - தேசிய தேர்தல்கள் ஆணைக்கு...
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வடக்கு கிழக்கு உட்பட...