கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கான உபகரணங்கள் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்களால் வழங்கிவைப்பு!

Thursday, March 15th, 2018

கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கென கிளிநொச்சி மலையாளபுரத்தில் இயங்கிவரும் வீஷ்மர் நிதியத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை கையளித்துள்ளார்.

மக்களுக்கான நலன் திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்துவரும் வீஷ்மர் நிலையம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உதவித்திட்டத்தை மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்  தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

இளைஞர்கள் அமைப்பினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் இந்த வீஷ்மர் நிதியத்துக்கான உதவித்திட்டத்தில் புல்வெட்டும் கருவி, தூவல் நீர்பாசனத்துக்கான கருவிகள், தண்ணீர் பம்பி, புல்லை பதப்படுத்தும் பொறி என இரண்டு இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வழங்கப்பட்ட இந்த உதவித்திட்டத்தின் ஊடாக கால்நடைகளுக்கான புல் உற்பத்தி  பின்னர் அறுவடை செய்யப்பட்ட இயந்திரம் மூலம் பதனிட்டு கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கும் இந்த திட்டத்தை தம்மால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் வீஷ்மர் நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்தார். அத்துடன் மாகாணசபை உறுப்பினரின் வை. தவநாதன் அவர்களின் இப்பங்களிப்பு தங்களின் நிதி செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியிருப்பதாகவும் இயக்குனர் இங்கு சுட்டிக்காட்டினார்.  மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியினூடான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: