கால்நடைகளை ஏற்றிச் செல்லும் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Monday, October 30th, 2017

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக  இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் மூலம் பாற்பண்ணைக் கைத்தொழில் துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் கால்நடைகளை எற்றிச் செல்வது  தொடர்பில் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும்வரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. தற்போது கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளர்களினூடாகவே வழங்கப்படுகின்றன.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்லும்போது ஏற்படுகின்ற பாரதூரமான விபத்துக்கள், உயிர்ச்சேதங்கள் குறித்தும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் கடந்த காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் (26) அநுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு யுவதிகள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் -...
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்துங்கள் - மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆ...
சங்கானையில் 14 விற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை - உரிமையாளர்களிற்கு 174,0...