கால்நடைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் தண்டம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபை அறிவிப்பு!

இரவு வேளைகளில் வீதிகளில் உறங்கும் கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிடில் பிரதேச சபையால் தண்டம் விதிக்கப்படும். இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட ஏ-34, ஏ-35 வீதிகளில் இரவு வேளைகளில் கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த வியாழக்கிழமை இரவு ஒட்டுசுட்டானில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வீதியில் படுத்திருந்த கால்நடை ஒன்றுடன் விபத்துக்குள்ளானதில் காயமடைந்தார். இதனால் இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடும் கால்நடைகளை உரிய முறையில் பட்டிகளில் அடைந்து பராமரிக்கும் கால்நடை உரிமையாளர்களுக்கு நாளைய தினம் பிரதேச சபையால் ஒரு அறிவித்தல் வழங்க இருக்கின்றோம். அதன் பின்னரும் இரவு வேளைகளில் வீதிகளில் காணப்படும் கால்நடைகள் பிரதேச சபையால் பிடித்து அடைக்கப்படும். அதற்குரிய அபராதத்தை செலுத்தினாலே கால்நடை உரிமையாளர் தன்னுடைய கால்நடையை மீட்டுச் செல்ல முடியும். என்றும் பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்தார்.
Related posts:
|
|