கால்நடைகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, September 20th, 2018

சமூக அக்கறையும் கால்நடைகளினதும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வேலணை பகுதியில் காணப்படும் கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தகுந்த நீர்வு எட்டப்படும் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலருமான நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி தெரிவித்தார்.

வேலணை பிரதேச சபையின் விஷே அமர்வு இன்றையதினம் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளால் அதிகளவு பாதிப்புக்கள் ஏற்படுவதால் அவற்றுக்கு தீர்வுகாவது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் சபையின் உறுப்பினர்கள் பல கருத்துக்களை முன்வைத்து விவாதித்திருந்த நிலையில் வீதிகளை அண்டிய பகுதிகளில் திரியும் கட்டாக்காலி கால்நடைகளை உரிய முறையில் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

42201399_226199448254186_8174983112745287680_n (1)

Related posts: