காலி முகத்திடல் சுற்றுலா மையம்  – துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு!

Tuesday, March 6th, 2018

சுற்றுலா மையம் ஒன்றை காலி கோட்டை மற்றும் காலி முகத்திடல் என்பவற்றை மையப்படுத்திய உருவாக்க துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலாத்துறையில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரெவல் கப்பல்கள் காலி துறைமுகத்திற்கு வருகின்ற நிலையில் அவற்றை சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகஅமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பை கடந்து செல்லும் சுற்றுலா கப்பல்களை கொழும்பிற்குள் ஈர்ப்பதற்கான செயல்திட்டம் ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வருடாந்தம் சுமார் 200 க்கும் அதிகமான சுற்றுலாக் கப்பல்கள் கொழும்பை அண்டிய கடற்பரப்பை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: