காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அரச அலுவலகங்கள் இடமாற்றம்!

Tuesday, October 31st, 2017

காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அரச அலுவலகங்களை பிறிதோர் இடங்களுக்கு இடமாற்றிக் கொள்ளும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகப் பாரம்பரியம் மிக்க இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையின் புராதன வரலாற்றுச் சின்னங்களுள் காலி கோட்டையும் ஒன்றாகும். இந்நிலையில் கோட்டைக்குள் சுமார் பதினைந்து அரச அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. கோட்டையின் முக்கியத்துவம் கருதி தற்போது அவை அங்கிருந்து இடமாற்றப்படவுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் குறித்த இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதன் பிற்பாடு காலி கோட்டையை புராதன தொல்பொருள் கண்காட்சியமாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் மேலும் வெளிகியுள்ளன.

Related posts: