காலிமுகத்திடல் பகுதி கூடாரங்களை அகற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்து – நால்வர் கைது!

Tuesday, July 26th, 2022

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் உள்ள போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அத்துடன் இன்றையதினம் பகல் ஒரு மணிக்குள் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுள்ளனர்.

இதேவேளை குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டது

மேலும், பொலிஸாரின் எச்சரிக்கையை அடுத்து தற்போது போராட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

000

Related posts:

சட்டத்தில் இடமில்லை : ஆகவே ஆதரவளிக்க முடியாதுள்ளது - முதல்வருக்கான இல்லம் தொடர்பில் றெமீடியஸ்!
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக...

GSP+ வரிச்சலுகை நாட்டிற்கு கிடைப்பதையிட்டு சில அரசியல் நயவஞ்சகர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - பி...
காடழிப்பை கட்டுப்படுத்த களத்தில் இறங்குகின்றது இலங்கை விமானப்படை - பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக...
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...